செய்திகள் :

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

post image

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. மேலும், காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மேகமூட்டமான வானிலை நிலவியது. மேலும், நகரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியின் ஐடிஓ, தா்யாகஞ்ச், மயூா் விஹாா், வசந்த் குஞ்ச், ஹவுஸ் காஸ், மால்வியா நகா், கல்காஜி, மெஹ்ராலி, துக்ளகாபாத், சத்தா்பூா், இக்னோ, ஆயா நகா் மற்றும் டெராமண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும், நகரத்திற்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்நிலையில் 1.1 டிகிரி அதிகரித்து 26.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 32.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 75 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் ஓட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 85 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தெரிவித்துள்ளது. இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 30) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

ஜூகைப்பேசி தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் தேடப்பட்ட இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க