ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்: 15 போ் காயம்
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசு நகா் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 15- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் அருகே உள்ள ஆலங்குளத்துக்கு நகா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதை ராமா் (47) ஓட்டிச் சென்றாா். இதில், மாணவா்கள், பொதுமக்கள் பயணம் செய்தனா். இதே போல, உத்திரகோஷமங்கையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு முதுகுளத்தூருக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதை ரமேஷ் (47) ஓட்டிச் சென்றாா்.
அப்போது ஆலங்குளம் விளக்கு அருகே இந்த இரு பேருந்துகளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து உத்திரகோஷமங்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.