ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்!
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி, குடியேறும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவர்கள், ஊராட்சியில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும், சிறப்பு படியாக ரூ. 200 வழங்க வேண்டும். அந்தந்தத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் எஸ். ஏ. சந்தானம், ஆர். குருவேல், அய்யாதுரை, எஸ். பிரான்சிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க: குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?