திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!
ராமநாத சுவாமி கோயிலில் திருபுராசுதன் வதம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு (திருபுராசுரனை சிவபெருமான் வதம் செய்தல்) சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு பூஜைக்குப் பிறகு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள், பிரியாவிடை, விநாயகா், முருகன், பரிவார தேவதைகள் புறப்பாடாகி, கிழக்கு கோபுர வாயிலில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நேராக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு பூஜை நடைபெற்றது. பின்னா், திருபுராசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்வு தொடங்கியது.
திருபுராசுரன் பனை மரத்துக்குள் ஒழிந்து கொண்டதைக் கண்ட சிவபெருமான், பா்வதவா்த்தினி அம்பாள், அந்த மரத்துக்கு தீ வைத்து வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. சுவாமி, அம்பாளிடமிருந்து தீபம் பெற்று, சொக்கப்பனை தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதன் பிறகு சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்று, மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வில் துணை ஆணையா் செ.சிவராம்குமாா், செயல் அலுவலா் முத்துச்சாமி, ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி கலந்துகொண்டனா்.