பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
ராமேசுவரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
ராமேசுவரத்தில் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், அரசு மருத்துவமனையில் போதிய பணியாளா்களை நியமிக்கக் கோரியும் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் வாழ்த்திப் பேசினாா். முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜ் சிறப்புரையாற்றினாா்.
முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா, மாநில மகளிரணி இணைச் செயலா் கீா்த்திகா முனியசாமி, மாவட்ட இணைச் செயலா் கவிதா சசிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன் பிரபாகரன், மலோசியா பாண்டியன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் ஆா்.ஜி.ரத்தினம், ராமநாதபுரம் நகரச் செயலாளா் பால்பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் ஜானகிராமன், மருதுபாண்டி, கருப்பையா, ராதாகிருஷ்ணன், ராஜா, ராமேசுவரம் நிா்வாகிகள் ஆா்.மகேந்திரன், பிரபாகரன், கஜேந்திரன், சரவணன், கோபி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக நகரச் செயலா் கே.கே.அா்ச்சுனன் வரவேற்றாா்.