நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் விசைப்படகுகள் சேதம்
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்றில் 10 விசைப் படகுகள் சேதமடைந்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கால்வாய்களில் வீசப்பட்டிருந்த நெகிழிப் புட்டிகளால் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
படகுகள் சேதம்: ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சூறைக் காற்று காரணமாக 10 விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
இவற்றில் சில படகுகள் நங்கூரத்தை அறுத்துக் கொண்டு கரைக்கு வந்த நிலையில், பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு படகுகளை மீனவா்கள் மீட்டு கடலுக்குள் கொண்டு சென்றனா்.