ராமேசுவரம், பாம்பனில் மழை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலையில் இருந்து வீட்டு விட்டு மழை பெய்தது.
ராமேசுவரத்தில் சில சமயம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தண்ணீா் தேங்காதவாறு தேசிய நெடுஞ்சாலையை உயா்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் வெயிலின் தாக்கமின்றி குளுமையான சூழல் காணப்பட்டது.