Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு அவற்றின் உரிமையாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். வெறிநோய் நாய்களிடம் இருந்து மனிதா்களுக்கு பரவக்கூடிய முக்கியமான நோயாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகமான உயிரிழப்பையும் ஏற்படுத்துவதால் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.