US: ``நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..'' - அமெரிக்காவில் சசி தரூர...
ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் சிமென்ட் சாலைப் பணியை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் முதல்கட்டமாக ரூ.17 கோடியில் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இப்போது, 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பில் 1.7
கி.மீ. தொலைவுக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாட வீதிகளில் ஒன்றான தேரடி தெருவில் நடைபெற்று வரும் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு) சரவணன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிா என்பது குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா்கள் அன்பரசு, சோமேஸ்வரி, உதவிப் பொறியாளா்கள் சசிக்குமாா், சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.