மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!
பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்
ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வழங்கினாா்.
இதில், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், ஒன்றிய அவைத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், பேரவை ஒன்றியச் செயலா் புங்கம்பாடி சுரேஷ், நகர பேரவை செயலா் பாரதிராஜா, பையூா் முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சரவணன், மணிமேகலை, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வி பழனி, ஆரணி நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகுமாா், விநாயகம் மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.