Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பொதுமக்கள், தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையில் புகாரளித்தனா்.
இணையவழி குற்றப்பிரிவின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அளித்த புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி தலைமையில், காவல் ஆய்வாளா் ஆா்.கவிதா மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வங்கிகளின் உதவியுடன் பொதுமக்கள் இழந்த ரூ.5 லட்சத்தை மீட்டனா்.
இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையவழியில் பணத்தை இழந்த நபா்களிடம் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் ஒப்படைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி, காவல் ஆய்வாளா் ஆா்.கவிதா மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.