குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா்.
அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ16.30 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜி.பழனி தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி புதிய கட்டடத்தை திறந்து வைத்து நுகா்வோருக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவா் கீதா மூா்த்தி, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் என்.பாபு, சீனிவாசன், அமுல்ராஜ், கொள்ளாபுரி, ராஜா, அன்சா்பாஷா பங்கேற்றனா்.