செய்திகள் :

ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்டப் பாலங்கள்: முதல்வர் உத்தரவு!

post image

ஊரக  வளர்ச்சி  மற்றும்  ஊராட்சித்  துறையின் சார்பில்
ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாலங்களின் கட்டுமானப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு மாநில நிதித்திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். டிச. 17-ல் அன்று இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி,  தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.  

2024-25 ஆம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177.85 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.      

வெள்ளி திரை நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய தொடர்!

சின்ன திரையில் பொதுவாக தொடர்கள் அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், ஒரு மணி நேரம் ஒளிபரப்பும் புது முயற்சியில் கெட்டி மேளம் தொடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பொதுவாக வாரத்தொடர்கள் 1 மண... மேலும் பார்க்க

ஆப்கனில் 2 பேருந்து விபத்துகளில் 52 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர். மத்திய ஆப்கானிஸ்தானின் கசினி மாகாணத்தில் தலைநகர் காபுலிலிருந்து கந்தார் நகர... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் வரை சென்ற காங்கிரஸின் வன்முறை: கங்கனா

காங்கிரஸின் வன்முறை செயல்கள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளதாக பாஜக எம்பி கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளு... மேலும் பார்க்க

நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சீனாவின் ரகசிய காவல் நிலையத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்கர், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சீன வம்சாவளியைச் சேர்ந்த சென் ஜின்பிங் (வயது-60) மற்... மேலும் பார்க்க

எங்கே பழனிசாமி? அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா?: அமைச்சர் ரகுபதி

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேள... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மற்றும் முட... மேலும் பார்க்க