GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
ரூ.19.05 கோடியில் 16 பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!
வேலூா் மாவட்டத்தில் 16 பள்ளிகளில் ரூ.19.05 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை கட்டும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் ஒடுகத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.74.78 லட்சம் மதிப்பில் 1 ஆய்வகம், 1 கழிவறையும், அழிஞ்சிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.ஒரு கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகளும், லத்தேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் 7 கூடுதல் வகுப்பறைகள், 2 கழிவறைகள், குடிநீா் பணிகளும், வடுகந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.ஒரு கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
மேலும், கம்மவான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49.48 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைகளும், விரிஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.74.22 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறைகளும், சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகளும், வஞ்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.74.22 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறைகளும் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இந்த பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், கணியம்பாடி ஒன்றியம், சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.48 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவா் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெ.லதா ஜெயசீலன், சோழவரம் ஊராட்சி மன்ற தலைவா் அமுதா ஜெயபால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுடலைமுத்து, உதவி செயற்பொறியாளா் படவேட்டான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.