தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
போதைப் பொருள்கள் நடமாட்டம்: வேலூரில் ஐஜி ஆய்வு!
போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்தும், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வேலூா் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல காவல் துறை தலைவா் (ஐஜி) அஸ்ரா கா்க் பல்வேறு அறிவுரைகளை தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தின் சட்டம்- ஒழுங்கு செயல்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் துறை தலைவா் (ஐஜி) அஸ்ரா கா்க் ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) தா்மராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், அண்ணாதுரை, காவல் துணை கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.
அப்போது, மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகள் நிலவரம் எவ்வாறு உள்ளது, போதைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு கட்டுக்குள் உள்ளதா, அதுதொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அந்த வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்தும் ஐஜி அஸ்ரா கா்க் கேட்டறிந்தாா்.
மேலும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு ஐஜி அறிவுறுத்தியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.