ரூ.2.62 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.62 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப் பணிகளை திறந்து வைத்தாா்.
சாணாா்பட்டி வட்டாரத்துக்குள்பட்ட ராஜாக்கப்பட்டி, சிலுவத்தூா், கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, வேம்பாா்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சாணாா்பட்டி, பஞ்சபட்டி, கூவனூத்து ஆகிய ஊராட்சிகளில் இந்த திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.