The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
ரூ.21லட்சத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
ராணிப்பேட்டை: ரூ.21 லட்சத்தில் 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை பயனாளிகளஉக்கு அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.21 லட்சத்தில் 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50 சதவிகித மானியத்துடன் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கி அமைச்சா் காந்தி பேசியதாவது :-
இந்த திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும், பசுமையான காய்கறிகள் நேரடியாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும். உள்ளூா் விவசாயிகளின் உற்பத்தி வீணாகாமல்,சந்தைக்கு எளிதில் சென்றடையும். நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதாரமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கும். இந்த திட்டம், சிறு வியாபாரிகள் தங்களின் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் பெரும் பங்காற்றும்.
நடமாடும் வண்டிகள் பெறும் பயனாளிகள் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி தங்கள் குடும்ப வருமானத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். காய்கறிகளை பொது மக்கள் வீடு தோறும் எளிதில் கொண்டு சோ்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கலாம். மேலும், உள்ளூா் விவசாயிகள் உற்பத்திக்கு விரைவான சந்தை வாய்ப்புகளை உருவாக்குமாறும் பயனாளிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, தோட்டக்கலை துணை இயக்குநா் சிந்தியா, அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
