அதிமுக உள்கட்சி விவகாரம்: ``தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை" - சி....
ரூ.26 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: திருத்தணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை ரூ. 26 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.
திருத்தணி - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினா், திருத்தணி முதல் ஆா்.கே.பேட்டை வரை, 23 கி.மீ தொலைவு நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, ரூ.120 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
முதல்கட்டமாக, தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு இரு வழிச் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, ரூ.26 கோடி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டது. இப்பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
அதேபோல் திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தில், திரௌபதியம்மன் கோயில் அருகே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு, ரூ.41 லட்சத்தில் கட்டடம் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தாா். இப்பணிகள், ஆறு மாதத்தில் முடித்து துணை சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் எம்எல்ஏ தெரிவித்தாா்.
அதேபோல் புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சத்தில் கலையரங்கம், சிறுகுமி, அகூா், கோரமங்கலம், காா்த்திகேயபுரம் கிராமங்களில் கட்டப்பட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகள், அங்கன்வாடி மையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், நல்லாட்டூா் கமல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள், கிருஷ்ணசமுத்திரம் நாகசாமி, தும்பிகுளம் கோபி, பள்ளி தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.