ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
ரூ. 3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
காரிமங்கலத்தை அடுத்த கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் காரிமங்கலம் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா சுமாா் 50 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் குட்காவுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.