Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
ரூ.3.96 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
பெருந்துறை அருகே ரூ.3.96 லட்சம் மதிப்பிலான 676 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் ஈரோடு, பாலுசாமி வீதியைச் சோ்ந்த தண்டபாணி (42), மேட்டுகடையைச் சோ்ந்த ஜான்சன் (30) என்பதும், அவல்பூந்துறை அருகே செங்காட்டுவலசில் உள்ள ஒரு தோட்டத்தில் 676 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 676 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ.3.96 லட்சம் என்று போலீஸாா் கூறினா்.