செய்திகள் :

சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியல்

post image

ஈரோட்டில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்மேலாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் சுமாா் 150 வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை வாரச்சந்தை கூடியது. வியாபாரிகள் சாலையோரமாக கடைகளை அமைத்தனா். அப்போது, மாநகராட்சி சாா்பில் வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காளைமாடு சிலை அருகே காந்திஜி சாலையில் திரண்டனா்.

அங்கு சாலையில் காய்கறிகளைக் கொட்டி திடீரென மறியலில் ஈடுபட்டனா். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் வைரம் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வியாபாரிகள் கூறியதாவது: நாங்கள் 40 ஆண்டுகளுக்கும்மேலாக இதே இடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கடைகளை அமைத்து வருகிறோம். வாரச்சந்தையை இடமாற்றம் செய்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும். இந்த வாரம் கடையை அமைத்தபோது எங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலா்கள் கட்டாயப்படுத்தினா். நாங்கள் இதே பகுதியில் தொடா்ந்து கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ரூ.3.96 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

பெருந்துறை அருகே ரூ.3.96 லட்சம் மதிப்பிலான 676 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் புகையிலைப் பொருள்கள் வி... மேலும் பார்க்க

காவிலிபாளையம் அரசுப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் கட்ட கோரிக்கை

கனமழையால் இடிந்து விழுந்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவருக்கு பதிலாக புதிய சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையத்தில் அரசு ம... மேலும் பார்க்க

ஈரோடு அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

பங்களாபுதூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம், வினோபா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (34), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய பொறியாளா் உயிரிழப்பு

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மென்பொருள் பொறியாளா் உடல் 24 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது. கோவை, சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

தூய்மைப் பணியாளா்களை தாக்கியதாக அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வண... மேலும் பார்க்க