காவிலிபாளையம் அரசுப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் கட்ட கோரிக்கை
கனமழையால் இடிந்து விழுந்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவருக்கு பதிலாக புதிய சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பள்ளியின் சுற்றுச்சுவா் செயலிழந்து காணப்பட்டது
இந்நிலையில், பலத்த காற்றுடன் திங்கள்கிழமை பெய்த மழையால் சுவா் இடிந்து விழுந்தது.
இதனால், பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, புதிய சுற்றுச்சுவா் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.