டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!
ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். IOCL/MKTC/HO/REC/2025
பணி: Junior Operator(Grade-I)
காலியிடங்கள்: 215
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினீஸ்ட், பிட்டர், ஓயர்மேன் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 78,000
வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Attendant(Grade-I)
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 78,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Business Assistant(Grade-III)
காலியிடங்கள்: 8
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி சாப்ட்வேரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 78,000
வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை!
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.300. இதர பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ioci.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.