செய்திகள் :

ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா?

post image

நாட்டின் தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு சட்டம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற இளைஞர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். F21(LC)/2025-SC(RC)

பணி: Law Clerk-cum-Research Associate

காலியிடங்கள்: 90

தகுதி: சட்டப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். சட்டப் பிரிவில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 80,000

வயதுவரம்பு: 7.2.2024 தேதியின்படி 20 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு குறித்து முழுவிபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? குற்றப்புலனாய்வுத் துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: போபால், பெங்களூரு, புவனேஷ்வர், தில்லி, மும்பை, திருவனந்தபுரம், ராஞ்சி, ஹைதராபாத், ஜோத்பூர், இம்பால், விசாகப்பட்டினம்,சென்னை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 9.3.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூ... மேலும் பார்க்க

சென்னையில் பிப். 8-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் பிப். 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

குற்றப்புலனாய்வுத் துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்.18-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

தேசிய அனல் மின் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து இன... மேலும் பார்க்க

சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஹைதராபாத்தில் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண். 06/2024பணி: ... மேலும் பார்க்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜியர் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி இன்ஜினியர், புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு இன்றைக்குள் (ஜன. 31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க