சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பிஎஸ்ஜி உள்பட 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி..! லிவர்...
ரெட்ரோ டிரைலர் எப்போது?
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ படத்தின் டிரைலர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: லோகேஷ் பிறந்த நாளில் கூலி டீசர்?
மே. 1 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆச்சரியமாக, இப்படத்தில் பூஜா ஹெக்டே சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் டிரைலர் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப். 14 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கங்குவா தோல்வியிலிருந்து மீள ரெட்ரோ படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யா காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.