செய்திகள் :

``ரெய்டு எல்லாம் வேண்டாம், பேசினாலே போதும்..'' -அதிமுக உடனான கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன்

post image
செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

ரெய்டு மூலம் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி தரப்படுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன், "யார் யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. திமுக, அதிமுக தரப்பில், பணம் இருப்போரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இதற்கும், கூட்டணி வற்புறுத்தலுக்கும் சம்பந்தம் இல்லை.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ரெய்டு மூலமாக மிரட்டல் விடுத்தது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். பிற கட்சிகளை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பேசினாலே போதும்" என்று கூறியிருக்கிறார்.

திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...... மேலும் பார்க்க

EPS சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு - ஏன்? | இரும்பின் தொன்மை | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* “தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” - முதல்வர் ஸ்டாலின் * தமிழரின் தொன்மையைப் பாருங்கள்! - சு.வெ பெருமிதம்! * கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்த மு... மேலும் பார்க்க

``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். "நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள்.... மேலும் பார்க்க

``தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா..?'' -சைஃப் அலிகான் நடனம்; பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மகாராஷ்டிராவில், எப்போதும் சர்ச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனாவார். தற்போது புனேயில் நடந்த பொதுக்கூட்... மேலும் பார்க்க

``மீண்டும் பொய் வாக்குறுதி கொடுப்பார்கள்; மக்கள் ஏமாறக்கூடாது..'' -முன்னாள் அமைச்சர் தங்கமணி

தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் தஞ்சை, தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று நடைபெற... மேலும் பார்க்க

Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

நேற்றைய தினம் (ஜனவரி 20) அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க ... மேலும் பார்க்க