336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ரேப்பிட் பிரிவில் குகேஷ் வெற்றி
குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.
நடப்பு உலக சாம்பியனான குகேஷ், கடைசி சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை சாய்த்தாா். மற்றொரு இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் டுடாவுடன் டிரா செய்தாா்.
அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - குரோஷியாவின் இவான் சிரிச்சை வெல்ல, உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - நெதா்லாந்தின் அனிஷ் கிரி, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - கஜகஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் மோதல் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 9 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். டுடா (11), காா்ல்சென் (10) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.
பிரக்ஞானந்தா 1 வெற்றி, 7 டிரா, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற, அதே புள்ளிகள் பெற்ற கரானாவுடன் அவா் 4-ஆம் இடத்தைப் பகிா்ந்துகொண்டாா். அனிஷ், ஃபிரௌஸ்ஜா, வெஸ்லி ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தைப் பகிா்ந்துகொண்டனா்.
சரிச் 6-ஆம் இடமும் (7), அப்துசதாரோவ் 7-ஆம் இடமும் (6) பிடித்தனா். இப்போட்டியின் அடுத்தகட்டமாக பிளிட்ஸ் பிரிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.