Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக ...
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தார்கள். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றவுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரோஹித் சர்மா இதனை மறுத்துவிட்டார். விராட் கோலியும் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்?
மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது ரோஹித்தின் வெற்றி சதவிகிதம் 74%ஆக இருக்கிறது. இது மற்றவர்களை மிக அதிகம். ரோஹித் இதேபோல் சென்றால் எக்காலத்துக்குமான ஒருநாள் போட்டிகளின் மிகச் சிறந்த கேப்டனாக மாறிவிடுவார்.
வதந்திகளை ரோஹித்தும் ஓய்வுபெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்? கேப்டனாக மட்டுமில்லை, பேட்டராகவும் ரோஹித் சிறப்பாக செயல்படுகிறார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கதை அளித்தார்.
ரோஹித் சாதனைகளே அவருக்காக பேசும்
அழுத்தம் அதிகமாக இருக்கும்போது முதல் ஆளாக முன்னின்று அணியை வழிநடத்தினார். அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவருக்காக பேசும். அது மட்டுமில்லை, அவர் தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார்.
பவர்பிளேவில் அவரது ஸ்டிரைக்-ரேட்டை பாருங்கள். 2022க்குப் பிறகு 115ஆக முன்னேறியுள்ளது. அதுதான் நல்லது, சிறந்ததுக்குமான வித்தியாசம். அது உங்களது சொந்த ஆட்டத்தை மாற்றும், அது நிற்கவே போவதில்லை.
எப்போதுமே எதாவது சிறப்பாக செயல்படவும் கற்றுக்கொள்ளவும் இருக்கத்தான் செய்யும் என்றார்.