செய்திகள் :

லக்னௌ கேப்டனுக்கு அபராதம்: 2-ஆவது முறையாக திக்வேஷுக்கு அபராதம்!

post image

மெதுவாக பந்துவீசியதற்காக லக்னௌ கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் உடனான நேற்றைய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ரிஷப் பந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான 20ஆவது ஓவரிலும் 4 ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே வைக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசினார்.

ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக 2 முறை இந்தமாதிரி நடைபெற்றால் அடுத்த ஒரு போட்டியில் கேப்டன் நீக்கப்படுவார்.

சமீபத்திய புதிய விதிகளின்படி அபராதம் மற்றும் தகுதி குறைப்பு புள்ளி வழங்கப்படும் (டீமெரிட் பாயிண்ட்ஸ்) என அறிவிக்கப்பட்டது.

நோட்புக் டிக் கொண்டாடிய திக்வேஷ் ரதி.

லக்னௌ சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மீண்டும் தனது பாணியான நோட்புக் டிக் பாணிக்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதாமாக விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு முந்தைய போட்டியிலும் இதேமாதிரி அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!

சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ரியான் பராக் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்... மேலும் பார்க்க

கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி; தில்லி கேபிடல்ஸ் அபாரம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ... மேலும் பார்க்க

இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 22 அன்று தொடங்கின. 74 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 184 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இ... மேலும் பார்க்க