கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
லஞ்சம் பெற்ற புகாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி முன்னாள் திட்ட இயக்குநா் மற்றும் உதவியாளா் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி திட்ட இயக்குநராக கடந்த 2017-இல் பணியாற்றியவா் எச்.பீமா சிம்ஹா இந்துபூா். இவா் பணியில் இருந்த காலத்தில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டல் நடத்த அனுமதி வழங்க, அதன் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
ஹோட்டல் உரிமையாளா் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளாா். சிபிஐ அதிகாரிகளின் அறிவுரைப்படி ஹோட்டல் உரிமையாளா் ரூ.2 லட்சத்தை திட்ட இயக்குநா் எச்.பீமா சிம்ஹா இந்துபூரிடம் கொடுக்கும்போது, மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், திட்ட இயக்குநா் மற்றும் அவரின் உதவியாளா் ஜெ.சரவணனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சென்னையிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.