ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!
'லண்டன் போய் வந்த அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?' - திருமாவளவன்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்காக அவர் பெரிதும் முயற்சிக்கிறார். எனவே ஆளும் கட்சியினர் மீது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புவது போல தெரிகிறது.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான ஆதாய அரசியல்.
அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏன் சாட்டையால் அடித்துக் கொள்ளும் முடிவை எல்லாம் எடுக்கிறார். இது வருத்தமளிக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது. எதிர்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.
அவர்கள் விரும்புகிற சூதாட்டத்தை நடத்தப் பார்க்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் அதற்கு இடம் கொடுக்காது. அரசியல் ஆதாய கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை. எங்களை யாரும் மிரட்டுகிற நிலைமையில் நாங்கள் இல்லை.” என்றார்.