துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்கிருஷ்ணன் (30). இவா், தேனியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் புதன்கிழமை லாரியில் சென்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.