'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 2 போ் உயிரிழப்பு
நாமக்கல் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதனை, திண்டுக்கல் மாவட்டம், தொப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (25) ஓட்டி வந்தாா். வாகனத்தில் நிலக்கோட்டையைச் சோ்ந்த நாகராஜ் (25), சக்திவேல் (28) ஆகியோா் உடனிருந்தனா்.
நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் திடீரென மோதியது. இதில், நாகராஜ், விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சக்திவேல் பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், சரக்கு வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.