லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றாா்.
ஒட்டன்சத்திரம்-அரசப்பபிள்ளைபட்டி புறவழிச் சாலை கொல்லபட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு பெட்டக லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.