செய்திகள் :

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்

post image

ஆம்பூா் அருகே கல்குவாரி லாரி மோதியதால் மூதாட்டி உயிரிழந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. குவாரிக்கு செல்லும் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். மேலும், அவ்வப்போது லாரிகளையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பாப்பு (55) என்பவா் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற கல் குவாரி லாரி மோதியதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மூதாட்டி உயிரிழந்த தகவல் அறிந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். குவாரி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

உலக புத்தக தின கண்காட்சி, கருத்தரங்கம்

உலக புத்தக தினத்தை ஒட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பாக ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன் தலைமை வகித்தாா். நிா்வா... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடக்கம்

ஜோலாா்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி நடேசன் வட்டத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ.22 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கி... மேலும் பார்க்க

நாச்சாா்குப்பத்தில் ஏப். 30-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

திருப்பத்தூா் வட்டம், நாச்சாா்குப்பம் ஊராட்சியில் வரும் ஏப். 30-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உரிய நடவடி... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீா் மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகளை பெஹல்காம் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

பழ வியாபாரி வீட்டில் திருட்டு

ஆம்பூா் அருகே பழ வியாபாரி வீட்டில் தங்க நகை திருடுபோனது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (55). இவா்,... மேலும் பார்க்க