உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!
லாவண்யா த்ரிபாதிக்கு ஆண் குழந்தை..! திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை!
நடிகை லாவண்யா த்ரிபாதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதற்கு நடிகர் சிரஞ்சீவி புகைப்படத்தினைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா த்ரிபாதிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி.
தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள இவர் 2017-இல் மிஸ்டர் படத்தில் நடித்தபோதே இருவருக்கும் காதலித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர், இருவருக்கும் 2023 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. மே மாதத்தில் கருவுற்றதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த தம்பதிகளுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.