பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
லிஃப்ட் கொடுத்து 18 மாதங்களில் 11 பேர் கொலை; பஞ்சாப்பை அதிரவைத்த தன்பாலின ஈர்ப்பாளர்!
பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
அங்குள்ள மணாலி ரோட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் டோல்கேட்டில் தண்ணீர் மற்றும் தேனீர் சப்ளை செய்பவர் என்று தெரிய வந்தது. இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி ராம் சரூப் (33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது கடந்த 18 மாதங்களில் மேலும் 10 பேரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. ஹோசியர்பூர் அருகில் செளரா என்ற கிராமத்தை சேர்ந்த ராம் சரூப்பிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு லிஃப்ட் கொடுத்து அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து... அல்லது அவர்களிடமிருந்த பொருள்களை கொள்ளையடித்துக்கொண்ட பிறகு கொலைசெய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது.
கொலையான பெரும்பாலானோர் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ராம் கொலை செய்ததாக கூறப்படும் 5 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் அடங்கும். சிலரை கொலை செய்துவிட்டு அவர்களது முதுகில் துரோகி என்று எழுதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையான ராம் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஒவ்வொருவரையும் கொலை செய்த பிறகு அவரது காலை பிடித்து மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்வது வழக்கமாகும்.
குடிபோதையில் ராம் அனைத்து உண்மைகளையும் தெரிவித்தார். ஆனால் கொலை செய்த யாரையும் தனக்கு நினைவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தந்தையான ராம் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். எனவே அவரது குடும்பத்தினர் கைவிட்டிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.