Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!
வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் நேற்று (பிப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆணையம் சார்பில் விடுதலை செய்யப்பட்ட அகதிகள் அனைவரின் பெயர்களையும் பதிவு செய்ப்பட்டு அவர்களுக்கு தேவையான போர்வைகள், ஆடைகள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகிவை வழங்கப்பட்டு தற்காலிகள் தங்குமிடங்களில் அவர்களை தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லிபியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அகதிகள் மற்றும் புகலிடம் தேடி அந்நாட்டிற்குள் தஞ்சமடைந்தவர்கள் ஆகியோரை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!
இந்நிலையில், நேற்று (பிப்.11) லிபியா உள்துறை அமைச்சகம் கூறுகையில் லிபியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய நைஜீரிய நாட்டு மக்கள் சிலர் அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் லிபியா நாட்டினுள் சட்டவிரோதமாக சுமார் 30 லட்சம் பேர் குடியேறியுள்ளதாகவும், இதனால் அந்நாடு பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் உதவியளிக்கவில்லையென்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.