செய்திகள் :

லோகேஷ் கனகராஜ் பிறந்தாள்: கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விடியோ!

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து விடியோவை கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.

இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளான மார்ச் 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு கூலி தயாரிப்பு நிறுவனம் பிறந்தாள் விடியோவை பகிர்ந்துள்ளது. சிறப்பாக எடிட் செய்யப்பட்ட அந்த விடியோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நவீன சினிமாவை மாற்றியமைத்தவர் என சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளது.

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-03-2025வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்... மேலும் பார்க்க

முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா். மகளிா் ஒற்றையரி... மேலும் பார்க்க

2025 ஐபிஎல் களம்!

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறாா். வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்சன் விரல் காயத்திலிருந்து மீண்டுவிட்டபோதும், ... மேலும் பார்க்க

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் தொடா்: முதன்முறையாக 19 இந்தியா்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டா் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு காா்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரா், வீராங்கனைகள் களமிறங்கு... மேலும் பார்க்க

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு!

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144-வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத... மேலும் பார்க்க