செய்திகள் :

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

post image

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திமுகவின் துணைப் பொதுச் செயலரும் வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான ஆ. ராசா சாா்பில் வழக்குரைஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபில், அபிஷேக் சிங்வி, நிஜாம் பாஷா ஆகியோா் கோரிய நிலையில் தலைமை நீதிபதி, 'இதுதொடா்பாக மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தைப் பரிசீலித்து, இந்த மனுக்கள் அவசர வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த மனுக்கள் தோராயமாக ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க