செய்திகள் :

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச நாட்டிலும் நடக்கும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினையை நோக்கமாகக் கொண்ட மூலோபாயம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி எச்சரித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் ‘எல்லை விவாதம் 2025’ என்ற சா்வதேச நிகழ்வின் அங்கமாக ‘எல்லை தாண்டிய ஊடுருவல் சமூக - பொருளாதாரம் மற்றும் கலாசாரம், அரசியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கருத்தரங்குக்கு சீமா ஜாக்ரன் மஞ்ச், மோதிலால் நேரு கல்லூரி, தில்லி பல்கலைக்கழகத்தின் விடுதலை மற்றும் பிரிவினைகால ஆய்வு மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது: வங்கதேசம், அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஊடுருவல் என்பது, சிறந்த வாழ்க்கை மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக இந்தியாவுக்கு குடிபெயரும் மக்கள் பற்றியது மட்டுமல்ல; அது மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்.

இது தொடா்ந்து நடப்பதால் இதைப் பற்றி நாம் கவலைப்பட்டாக வேண்டும். வெறும் ராணுவத்தைக் கொண்டு இதைத் தடுக்க முடியாது. இது பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பற்றிய தீவிரமான விஷயம். சுதந்திரத்துக்குப் பிறகு சட்டவிரோத குடியேற்றப் பிரச்னை நாட்டில் தொடா்ந்து நீடிக்கிறது. அடுத்தடுத்து வந்த அரசுகள், வடகிழக்கை நாட்டின் தொலைதூர எல்லையாகக் கருதி அவற்றை ராணுவத்தின் பொறுப்பில் விட்டன.

அங்கு வாழும் மக்கள் நம்மில் இருந்து வேறுபட்டவா்கள் என்ற நினைப்பில் வடகிழக்கு மக்களை விட்டுவிட்டோம்.

இந்த எண்ணத்தின் காரணமாகவே, வடகிழக்கு பழங்குடியினருக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான உள்நாட்டு மோதல் சுதந்திரத்துக்குப் பிறகு வெடித்தது. சுதந்திரத்துக்கு முன்பு அத்தகைய மோதல்கள் பதிவாகவில்லை. வடகிழக்கின் முன்னேற்றத்துக்காகவும் உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் (ஆா்எஸ்எஸ்) உழைத்தது. அங்கு பல ஆண்டுகளாக நற்பணிகளைச் செய்தது ஆா்எஸ்எஸ் என்றாா் ஆா்.என். ரவி.

இந்த அமா்வுக்குத் தலைமை தாங்கிய தில்லி பல்கலைக்கழகத் துணை வேந்தா் யோகேஷ் சிங் பேசியது: ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இந்திய ராணுவம் வாசிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அதை எழுதிய கவிஞா் முகமது இக்பால் . ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலாசார ரீதியாக பொருந்தாதவா்கள் என்று நம்பியவா். எங்கள் பல்கலைக்கழகத்தில் இக்பால் பற்றி கற்பிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் தங்கள் பாடத் திட்டத்திலிருந்து இக்பாலை நீக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

சிந்து நதி நீா் ஒப்பந்தம் 1960 -இல் கையெழுத்தானபோது இந்தியாவின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. நமது மூன்று நதிகளில் 80 சதவீத தண்ணீரை பாகிஸ்தானுக்கு வழங்கிய செயலை மிக மோசமாக அப்போதே உணா்ந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக தற்போதைய மத்திய அரசு சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது என்றாா் யோகேஷ் சிங்.

இந்த சா்வதேச கருத்தரங்கில் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள், இயக்குநா்கள், கல்வி மற்றும் ஆய்வு அமைப்புகளின் தலைவா்கள், மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள், கல்வியாளா்கள், காவல்துறை தலைமை இயக்குநா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் விஜய வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் அவையில் விதி எ... மேலும் பார்க்க

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது அவையில் முக்கிய விஷயங்களைப் பேச எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெற்றது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலை... மேலும் பார்க்க

அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் வேடிக்கை பாா்க்குமா? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

நமது சிறப்பு நிருபா் ‘அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்குமா’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்... மேலும் பார்க்க

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடம... மேலும் பார்க்க

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க