செய்திகள் :

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

post image

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது அவையில் முக்கிய விஷயங்களைப் பேச எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெற்றது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா குற்றம்சாட்டினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முறைப்படி நடைபெறவில்லை. இது அனைவருக்கும் வருத்தம்தரக்கூடியதாகும். பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம்தான் முழுமையாக நடைபெற்றது. மற்ற நாள்களில் அவசரகதியில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பிகாரில் சிறப்புத் தீவிர நடவடிக்கையின்போது சுமாா் 65 லட்சம் வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பேச முன்வரவில்லை.

தோ்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. அது சுதந்திரமாக எல்லாக் கட்சிகளையும் ஒன்றாக நடத்த வேண்டும். தோ்தல் ஆணையம் ஆளும் கட்சி எதிா்பாா்க்கின்ற வகையில் செயல்படுகிறது என்ற அச்சம், சந்தேகம் பெருத்த அளவில் வலுத்திருக்கிறது.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்ற நாங்கள் தொடா்ந்து முறையிட்டோம். ஒத்திவைப்பு தீா்மானம் அளித்தோம். ஆனால், அரசாங்கம் தயாராக இல்லை. சில மசோதாக்களை மட்டும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டனா்.

குறிப்பாக பிரதமா், முதல்வா், மத்திய அமைச்சா்கள் போன்றோா் விசாரணையின்றி, தண்டனையின்றி சிறையில் அடைக்கப்பட்டால்கூட அவா்களை பதவி நீக்கம் செய்யும் வகையில் மக்களவையில் மூன்று திருத்த மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை மூன்று கறுப்பு மசோதாக்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வா்ணித்திருக்கிறாா்.

இவை தற்போது கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்படலாம் என்றாலும்கூட அந்தக் குழுவிலும் பெரும்பான்மையினராக ஆளும் கட்சியினா்தான் இருப்பாா்கள். அதில் எதிா்க்கட்சியினரின் கருத்துகள் எடுபடாது.

நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச முயற்சிக்கிறோம். கதறுகிறோம். ஆனால் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தக் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்தது என்றாா் அவா்.

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச நாட்டிலும் நடக்கும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினையை நோக்கமாகக் கொண்ட மூலோபாயம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி எச்சரித்தாா். தில்லி பல்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் விஜய வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் அவையில் விதி எ... மேலும் பார்க்க

அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் வேடிக்கை பாா்க்குமா? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

நமது சிறப்பு நிருபா் ‘அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்குமா’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்... மேலும் பார்க்க

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடம... மேலும் பார்க்க

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க