செய்திகள் :

வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் மோசடி... போலீஸ் தேர்வில் சிக்கிய இளைஞர்!

post image

மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் நடந்த தேர்வில் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த குஷ்னா தல்வி என்பவரும் தேர்வு எழுத வந்தார். அவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை கண்காணிக்க வந்தவர் தல்வியை சோதித்துப்பார்த்தார். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அவரது காதை பார்த்தபோது உள்ளே மிகவும் சிறிய ஹெட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெட் போனை வெளியில் இருந்து பார்த்தால் பார்க்க முடியாது. அது காதிற்குள் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கவனிக்க முடியும்.

அந்த ஹெட்போன பறிமுதல் செய்தபோது அதில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வெளியில் இருந்து புளூடூத் மூலம் விடையை தெரிவித்துக்கொண்டிருந்தனர். சச்சின் மற்றும் பிரதீப் ஆகிய அந்த நண்பர்கள் வெளியில் இருந்து கொண்டு தல்விக்கு விடைகளை தெரிவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தல்வியிடமிருந்து மொபைல் போன், சிம்கார்டு, ஹெட்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தல்வி கைது செய்யப்பட்டுள்ளார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில்தான் கமல்ஹாசன் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதிய போது ஹெட் போன் பயன்படுத்தி விடையை வெளியில் இருந்து வாங்கி எழுதுவார். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கிறது.

பேனா தினம்: சட்டையில் எழுதி கொண்டாடிய மாணவிகள்; சட்டையை கழற்றி, வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர். இதற்கு பள்ளி முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர... மேலும் பார்க்க

தேனி: காவல் நிலையத்தில் கொள்ளை முயற்சி... பரபரத்த போலீஸ்; இருவர் கைது! - நடந்தது என்ன?

தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தக... மேலும் பார்க்க

தொடரும் மீனவர் சிறை பிடிப்பு... ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் கைதுசெய்த இலங்கை கடற்படை!

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது பல ஆண்டு காலமாக தொடர்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 569 மீனவர்கள் கைதுசெய்... மேலும் பார்க்க

'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!

மத்திய பிரதேசம் திவாஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் படிதார். இவரது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் செய்த சோதனையில் வீட்... மேலும் பார்க்க

மதுரை: கோயிலுக்கு வந்த சிறுமி பாலியல் வதை செய்யப்பட்ட கொடூரம்; போலீஸ் எஸ்.எஸ்.ஐ கைது - என்ன நடந்தது?

மதுரை மாவட்டத்தில் கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியை போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கைதாகியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்சோ வழக்குசென்னை அண்ணா பல்க... மேலும் பார்க்க

பாஜக Ex.MLA வீட்டில் IT ரெய்டு; முதலைகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி... வனத்துறை வழக்குப்பதிவு!

வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் ... மேலும் பார்க்க