செய்திகள் :

``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்

post image

எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர் நடந்துகொண்ட விதம். அவரை நம்பி வந்தவர்களை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றது உதாரணமாக அமைந்துள்ளது.

அவர் யாருக்கும் விசுவாசி இல்லை என்பதை தமிழ்நாடு நன்றாக அறிந்துள்ளது. இன்று பா.ஜ.க தான் நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார்.

அப்படி, 4 ஆண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க-வை நாடாளுமன்றத் தேர்தலில் கழற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர்.

தனக்கு முதலமைச்சர் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்குக் கைவந்த கலை.

ragupathi

மூன்றாம் தரமான அரசியல்வாதிதான் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எல்லாம் உதாரணமாக அமைந்துள்ளன. இனி, அ.தி.மு.க தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக்கொண்டால் சரி.

யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவது, 'எனக்கு ஆட்சி முக்கியமல்ல. பதவிதான் முக்கியம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதுதான் முக்கியம்' என்று சொல்லக்கூடியவர்.

அவரால் அ.தி.மு.க கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது. இன்று முகத்தை மறைத்துக்கொண்டு பலர் திரிகின்றனர்.

அதில், எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தைக்கூட காட்ட முடியாமல் தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும்போது உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டும் அசிங்கப்பட்டும் வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம்.

அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அடகு வைத்துவிட்டார். இதனை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு

தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கடைப்பிடிக்காமல் தான் அவர்கள் செல்கின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறையில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலா முடித்துவிட்டு வந்துவிடுகின்றனர்.

இதைத்தவிர, வேறு எந்தச் சாதனையும் கிடையாது. மக்கள் நிச்சயமாக அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள். வாக்களிக்க மாட்டார்கள்.

மக்களுக்குத் தெரியும், யார் வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது தெரியும். நல்லாட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தமிழ்நாடு மக்கள்.

விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வெளியே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கலாம். விமான நிலையத்திற்குள் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாததால் தான் பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன.

ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் தான் இந்த வினை நடந்துள்ளது. அரசு கட்டுப்படுத்தப் போனால் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள்.

அவருக்கு பெரிய கூட்டம் கூடியது நாங்கள் தடுத்துவிட்டதாகச் சொல்வார்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை எல்லாம் அமைதியாகச் சந்தித்துச் சென்றவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா?

வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜி தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல், நடிகர்களுக்குக் கூட்டம் கூடத்தான் செய்யும். அது, இயற்கை.

கடைகளைத் திறக்க வரும் சாதாரண நடிகரைக் கூடப் பார்ப்பதற்கு கடைவீதிகளில் அதிக மக்கள் கூடுவார்கள். அது, சினிமா மோகத்தால் வருவதே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல.

சமத்துவமே தி.மு.க தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் தி.மு.க. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் 2026 -ல் சமத்துவ ஆட்சியாக உள்ள தி.மு.க தான் வரும் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர்; சினிமாவை அரசியலாக மாற்றியவர்" - யுகபாரதி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாளான நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

பழனி: தார்ப்பாய் வீடுகள்; வனவிலங்கு அச்சுறுத்தல்கள்; மலசர் பழங்குடிகளின் அவலம் நிலை | Photo Album

பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்க... மேலும் பார்க்க

``கர்நாடகாவின் இந்தத் தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன; இது தொடர்கிறது!'' -ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது... "நான் எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காத அரசு உயரதிகாரிகளுக்கு அபராதம்!’ - தாக்கலானது மசோதா

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மார்ச் 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்... மேலும் பார்க்க

America: வட்டியை 0.25% குறைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி; இன்னும் குறையலாம்! - ஏன் இத்தனை குறைப்புகள்?

நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட் அதாவது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும், இந்த வட்டி குறைப்பு என்ன செய்யும்,... மேலும் பார்க்க

``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை... மேலும் பார்க்க