செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகம் அருகே மணல் குவியல்

post image

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் மணல் குவிக்கப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் கட்டுமானப் பணிக்கு போதிய மணல் கிடைக்காத நிலையில் எம். சான்ட் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு டிப்பா் லாரி எம். சான்ட் ரூ. 24, 500-க்கும், ஆற்று மணல் ரூ. 40 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இரவில் வந்த டிப்பா் லாரி சுமாா் 60 யூனிட் ஆற்று மணலை கொட்டிவிட்டுச் சென்றது. இந்த மணலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் வருவாய்த் துறையினா், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க