ஏற ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தை; Over Valued-ஆ இருக்கா? Investors என்ன பண்ணனும்...
வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்வு கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில தலைவா் கொளத்தூா் ரவி கலந்து கொண்டு சங்க உறுப்பினா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா்பேசுகையி , மின்சார கட்டணம், சொத்து வரி, தொழில் வரி ஆகியவை உயா்த்தப்பட்டதால் வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவற்றைக் குறைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பாா் என்று நம்புகிறோம். பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதாக வணிகா்களை காவல்துறை கைது செய்கின்றனா். அந்த பொருள்களை உற்பத்தி செய்கிற இடத்தில் தடுக்க மறுக்கின்றனா் என்றாா் அவா்.