லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
வண்ணாா்பேட்டையில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரை கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் வகையில் செயல்படுவதாக, தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக தலைமை அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
செல்லபாண்டியன் சிலை அருகே நடைபெறும் இப்போராட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.