1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!
வனுவாடூ தீவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! மீட்புப் பணியில் ஆஸ்திரேலிய குழு
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வனுவாடூ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலடுக்கத்தால் 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 6 பேர் நிலச்சரிவுகளாலும், நால்வர் கட்டட இடிபாடுகளாலும், மேலும் நால்வர் மருத்துவமனையிலும் உயிரிழந்திருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனுவாடூ தீவில் மீட்புப் பணியில் ஈடுபட அண்டை தீவான ஆஸ்திரேலியாவிலிருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பேரிடர்கால உதவிக்குழுவில்(டிஏஆர்டி - டார்ட் ) இருந்து முதல்கட்டமாக ஒரு மீட்புக்குழு இன்று(டிச. 18) ஆஸ்திரேலிய விமானப் படை விமானம் மூலம் வனுவாடூ தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த மீட்புக்குழுவில் தீயணைப்பு வீரர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களுடன் மீட்புப்பணியில் உதவிபுரியும் மோப்பநாய்களும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் டார்ட் மீட்ப்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.