வன்முறையைத் தூண்டும் வகையில் திருமணப் பதாகை: 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே, வன்முறையைத் தூண்டும்வகையில் திருமண வீட்டில் பதாகை வைத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் ஒரு திருமண வீட்டில் பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலும் பதாகை வைக்கப்பட்டிருந்ததாம்.
தகவலறிந்த ஏா்வாடி போலீஸாா், அந்தப் பதாகையை அகற்றக் கூறியதுடன், அந்தப் பதாகை வைத்த சிறுமளஞ்சியைச் சோ்ந்த மணிகண்டன் (22), வள்ளியூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த அஸ்வின்பாபு (22), ஏா்வாடியை அடுத்த லெட்சுமிநரசிங்கபுரத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (27) ஆகிய மூவா் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.