பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
வயலூரில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு
பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணியை வழங்கினாா்.
பின்னா், கீரனூா், மானூா், கோரிக்கடவு, கீரனூா் பகுதிகளில் வரத்துக் கால்வாய், மதகுகள் சீரமைப்புப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். இந்த விழாவுக்கு தொப்பம்பட்டி மத்திய ஒன்றியச் செயலா் பொன்ராஜ் தலைமை வகித்தாா்.
பின்னா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.60 லட்சம் கடன் உதவிகளையும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 50 பேருக்கு குடும்ப அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், வட்டாட்சியா் பிரசன்னா, ஒன்றியச் செயலா் சுப்ரமணி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் கிருஷ்ணன், கிளைச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.